குஜராத்: கள்ளச்சாராயத்துக்கு 72 பேர் பலி, பெண்கள் போராட்டம்-கண்ணீ்ர் புகை வீச்சு

இந்த மாநிலத்தி்ல பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த 25 பேர் பலியாயினர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இவர்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்களை அமைத்து அரசு சிகிச்சை அளித்தாலும் நேற்றும் இன்றும் மேலும் பலர் பலியாகியுள்ளனர்.
நகவ் பகுதியில் குடித்துவிட்டு இறந்து கிடந்த மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கள்ளச் சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 2 எஸ்பிக்கள் உள்பட 6 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
நகவ் பகுதியில் ஹரிசங்கர் என்பவர் தான் கள்ளச் சாராயம் விற்று வந்துள்ளார். அவரை தலைமறைவாகிவிட்டார்.
வருகிறார்கள்.
இதற்கிடையே பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய முதல்வர் நரேந்திர மோடியை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய 'பந்த்' நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சியினர், போலீசார் உதவியோடு கள்ளச் சாராய கும்பல்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர்களை உடனே ஒடு்க்க வேண்டும் என்று கோரி பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதோடு தடியடியும் நடத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications