வெளிநாட்டு வேலை-முன்னாள் வங்கி ஊழியர் கைது
சென்னை: இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை தமிழர்களை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட அமெரிக்கா, அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோய் வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் இந்த வெளிநாட்டு வேலையின் மீதுள்ள மோகம் குறையாமல் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் அரியலூரை சேர்ந்த செந்தில்குமார்(25). இவருக்கு சமீபத்தில் லண்டனில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூ. 2 லட்சம் சம்பளத்துக்கு முன்பதிவு அலுவலர் வேலை காலி இருக்கிறது. உங்களுக்கு சேர விருப்பமா என கேட்டு இ-மெயில் ஒன்று வந்தது.
எப்படியாவது வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த செந்தில்குமார் இந்த வாய்ப்பை கோட்டைவிட கூடாது என முடிவு செய்தார்.
இதையடுத்து அவரிடம் விசா பதிவு, விமான டிக்கெட் மற்றும் இதர செலவுகள் எனக்கூறி அந்த மர்ம ஆசாமிகள் செந்தில் குமாரிடம் ரூ. 8 லட்சத்து 9 ஆயிரத்து 300 கேட்டனர். அவரும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 17ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணை செய்தார். இதையடுத்து விசாரணை களத்தில் இறங்கிய சைபர் போலீசார் அதிரடியாக செயல்பட்டனர். செந்தில் குமார் வங்கிகளில் போட்ட பணத்தின் ரசிதை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அவர்கள் கடந்த 5ம் தேதி மகராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்த மீரா கிழக்கு சாலையை சேர்ந்த சுனில் டிகவாலே என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவருக்கு இந்த டிகவாலே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் எடுத்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் சென்னை கொண்டு வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் ஒரு முன்னாள் வங்கி ஊழியர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications