2 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் குளோரைடு தடையை நீக்ககோரி 3000 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டது. 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
மின் கட்டணம் உயர்வு காரணமாக தமிழகத்தில் இயங்கி வந்த தீப்பெட்டி தயாரிக்கும் முலப்பொருளான குளோரைடு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. இதனால் பாண்டிசேரியில் இருந்து குளோரைடு வரவழைக்கப்பட்டு தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்திற்கு குளோரைடு கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.
தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பாண்டிசேரியில் இருந்து கொண்டு வரப்படும் மூலப்பொருளுக்கு தடை நீக்க கோரியும், குளோரைடு தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி வந்தனர்.
இதன் பொருட்டு ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்திருந்தனர். இதன்படி இன்று கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள பகுதி இயந்திரம் மற்றும் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் என 3 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டது.
2 லட்சம் தொழி்லாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications