அரசுடன் உடன்பாடு-டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உதவித் தொகையை உயர்த்தித் தரக் கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 3 நாட்களாக அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது என்று கூறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில், இன்று பயிற்சி டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துடன் 4வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அமைச்சரிடம் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முதல்வர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது.
இனி அரசு மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications