திண்டுக்கல் டாக்டர் கொலையில் வக்கீலுக்கு தொடர்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் வக்கீல் ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

திண்டுக்கல் ஏ.எம்.சி. ரோட்டைச் சேர்ந்தவர் டாக்டர் பாஸ்கரன் (71). இவர் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி மர்ம நபர்களால் கடத்திச் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது பிணம் பொள்ளாச்சி ஆழியாறு அணைப்பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தினர்.

ஆனால், திண்டுக்கல் போலீசாரின் விசாரணையில் போதிய அளவு முன்னேற்றம் இல்லாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையைத் துவக்குவதற்கு முன் எஸ்.பி. கேம்ப் ஆபீஸ் அருகே நின்றிருந்த ஒரு மர்ம காரை கைப்பற்றினர். அதிலிருந்த செல்போன், 2 சிம்கார்டு, ஸ்டிக்கர் மற்றும் சில பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர்.

இந்தக் கார் கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் தனக்குச் சொந்தமானது என்றும் சிலர் தன்னையும் காரையும் கடத்திச் சென்றதாக புகார் கூறியிருந்தார்.

இதனையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில், டாக்டர் கொலை வழக்கில் 8 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த 8 பேரில் ஒருவர் டாக்டர் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் செல் போன்களில் பேசும் போது எந்தப் பகுதியிலிருந்து பேசுகிறார் என்பதை அறிய முடியாத வகையில் நுணுக்கமாக செல்போனை கையாண்டு வருகிறார்
என்றும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், டாக்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வக்கீல் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+