ரீட்டா பகுகுணா பேசியது தவறு- சரியல்ல: ராகுல் காந்தி
அமேதி: உ.பி. காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், உ.பி. அரசு செயல்படவில்லை என்று அவர் வெளியிட்ட ஆதங்கம் சரியானதே என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
உ.பி. மாநிலம் அமேதியில் பெரும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு பரவலாக உள்ளது.
அமேதியில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று அமேதிக்கு வந்தார் அத்தொகுதி எம்.பியான ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக அமேதி வந்த ராகுல் காந்தி கட்சியினர் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உ.பி. மாநிலத்தில் யானைகளுக்கும் (பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்), பிறருக்கும் சிலைகள் வைக்க நிறைய இடம் உள்ளது.
அதேசமயம், வளர்ச்சித் திட்டங்களுக்கும், சீரான மின் விநியோகத்திற்கும் அரசு இடம் தர வேண்டும்.
காங்கிரஸ் கட்சி உ.பியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய நேரம் வ்நது விட்டதாகவே நான் உணர்கிறேன்.
ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது, பேசிய தொணி, வார்த்தை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவை சரியல்ல.
இருப்பினும் ஜோஷியின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உ.பி. அரசு செயல்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அது சரியானதே. உ.பியில் எங்கு போனாலும் அரசின் செயல்படாத தன்மையைக் காண முடிகிறது.
ஜோஷி மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் தலைவரும், மூத்த தலைவர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அது எனது வேலையல்ல.
டெல்லியிலிருந்து மத்திய அரசு உ.பி. அரசுககு அனுப்பி வைக்கும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஏழைகளைப் போய்ச் சேருவதை காங்கிரஸ் கட்சி கண்காணிக்கும். அது எங்களது கடமை. பெருமளவு பணத்தை நாங்கள் அனுப்பி வைத்து, அதை இங்குள்ள அரசு வீணடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் ராகுல்.
சமீபத்தில் உ.பியை விட டெல்லியில் மிகப் பெரிய அளவில் மின் வெட்டு நிலவியது என்பது நினைவிருக்கலாம். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் அப்போது பெரிய அளவில் வருத்தம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் நினைவு கூறத் தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications