அரியவகை மான் வேட்டை - 5 பேர் கும்பலுக்கு பிடிவாரண்ட்
செங்கோட்டை: கடையநல்லூர் வனப்பகுதியி்ல் அரியவகை மான் வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இக்கும்பலைச் சேர்ந்த சிலர் திமுகவினர், அதிலும் ஒருவர் நகராட்சி கவுன்சிலர் என்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க யோசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடையநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மிளா, மான், காட்டு பன்றி, உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அத்துடன் அரிய வகை பறக்கும் அணில், பாம்பு போன்றவைகளும் உள்ளன.
இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேக்கரை அடவிநயினார், கருப்பாநதி நீர்தேக்கங்கள் உள்ளது. இந்த நீர்தேக்கப் பகுதியில் இப்பகுதியை சேர்ந்த பிரபல புள்ளிகளின் நிலங்களும், பங்ளாக்களும் உள்ளது. இரவு நேரங்களில் இந்த விஜபிக்கள் மான், மிளா, போன்ற வனவிலங்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வருவது வழக்கம்.
கடந்த 13ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லுர் வனத்துறை அதிகாரி ராஜகுலசேகர பாண்டியன் மற்றும் வனத்துறையினர் சின்னக்காடு பகுதியில் ரோந்து வந்தபோது சந்தேகத்திற்கிடமாக முறையில் சென்னை பதிவு எண் கொண்ட ஜீ ஒன்று நிற்பதை கண்டு அருகே சென்றபோது அந்த ஜீப்பில் இருந்த கும்பல் தப்பியோடியது.
ஜீப்பில் வனத்துறையினர் சோதனை நடத்தியபோது அரிய வகை சருகுமான் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்த மானையும், ஜீப்பையும் கைப்பற்றிய வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் சுந்தரம் என்ற குட்டி, மேலக்கடையநல்லூர் ராமகிருஷ்ணன், காசிமேஜர்புரம் கணேசன், மேலக்கடையநல்லூர் பால்பாண்டி, கிருஷ்ணாபுரம் ஜெயக்குமார் என்ற சிதம்பரம் ஆகிய 5 பேர்தான் மானை வேட்டையாடியது என தெரிய வந்ததை தொடர்ந்தது.
இவர்களில், ராமகிருஷ்ணன் கடையநல்லூர் நகராட்சி திமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும் கைது செய்வதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டிரு்ப்பதால் வனத்துறையும், போலீஸாரும் நிதானம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் 5 பேரையும் கைது செய்ய வனத்துறையினர் இன்று செங்கோட்டை மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உத்தரவு பெற்றனர்.
இதையடுத்து இக்கும்பலைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications