ஸ்டிரைக்கை மீறி மணல்-லாரி மீது தாக்குதல்
மார்த்தாண்டம்: விளாத்திகுளத்தில் இருந்து குமரி மாவட்ட குடோனுக்கு அனுமதி பெற்று மணல் கொண்டு சென்ற லாரியை மார்த்தாண்டம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடுத்தி நிறுத்தி அடித்து நொறுக்கினர்.
குமரி மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான பணிகளுக்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து அரசு அனுமதி பெற்று மணல் கொண்டு வரப்படுகிறது.
இதில் போலி பாஸ்கள் மூலம் கேரளாவுக்கு மணல் கடத்திய லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றிய லாரிகளை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை கண்காணிக்க களிககாயவிளை, ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் செக்போஸ்டுகளில் வருவாய் துறை அதிகாரிகள் குழுவும் நிய்மிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகளின் கெடுபிடிகளை கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்க கோரியும் குமரி மாவட்ட மணல் லாரிகள் உரிமையாளர் சங்கம் சார்பில் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால் கு்மரி மாவட்டத்தில் இயங்கும் 1500ககும் மேற்பட்ட லாரிகள் மணல் எடுக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மணல் லாரிகள் தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு மணல் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலிருந்து பணசமூடு அருகே உள்ள புலியூர் சாலை மணல் குடோனுக்கு அனுமதி பெற்று ஒரு லாரியில் மணல் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
மார்த்தாண்டம் அருகே மேலபம்மம் பகுதியில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணல் லாரியை தடுத்து நிறுத்தி அடித்து நொருக்கினர்.
மேலும் லாரி டிரைவரான அரக்கோணத்தை சேர்ந்த தட்சீணாமூர்த்தி என்பவரை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தட்சீணாமூர்த்தி குழித்துறை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications