சிறைபிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

கடந்த 4- ம் தேதி, 727 படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில், 5 படகுகளைச் சேர்ந்த 21 பேரை, இலங்கை கடற்படையினர் பிடித்துச்
சென்று, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

இதைக் கண்டித்து, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் விளைவாக தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+