மொபைல் எண் 'போர்ட்டபிலிட்டி' சேவையில் இழுபறி!
டெல்லி: மத்திய அரசின் தாமதத்தால் செப்டம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மொபைல் போன் போர்ட்டபிலிட்டி சேவையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த சேவை தொடங்காது எனத் தெரிகிறது.
இந்த சேவைக்கான விதிமுறைகளையே இன்னும் மத்திய தொலைத் தொடர்புத் துறை உருவாக்காமல் உள்ளதாம்.
போர்ட்டபிலிட்டி சேவை என்பது, ஒரு மொபைல் போன் வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்தின் சேவையிலிருந்து இன்னொரு நிறுவன சேவைக்கோ அல்லது ஒரே நிறுவனத்தின் ஒரு தொழில்நுட்பத்திலிருந்து இன்னொரு தொழில்நுட்பத்திற்கோ மாறினால், அவருடைய எண் மாறாமல் அதே எண்ணில் தொடர முடியும்.
இந்த அருமையான சேவையைத் தொடங்கத்தான் மத்திய அரசு இந்த இழு இழுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சேவைக்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் செப்டம்பர் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது நடக்காது என்று தெரிகிறது.
இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவை அமலுக்கு வரும்.
இந்த சேவை என்பது ஒரு புதிய சிந்தனையாகும். எனவே அதற்கேற்ப விதிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. அந்தப் பணி நடந்து வருகிறது என்றார்.
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்தான் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து டிராய் தலைவர் ஜே.எஸ்.சர்மா கூறுகையில், ஏற்கனவே விதிமுறைகள் குறித்த வரைவு ஆவணம் தயாராகி விட்டது. ஜூலை 27ம் தேதி இதுதொடர்பாக திறந்தவெளி விவாதம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இது இறுதி செய்யப்படும் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications