இடைத் தேர்தல் - சரத் கட்சி, மனித நேயக் கட்சிகளும் புறக்கணிப்பு
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆகஸ்டு 18-ந் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.
மறுசீரமைப்பிற்கு முன் உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட இத்தொகுதிகள், 2011 பொதுத் தேர்தலின்போது பெரும் மாறுதல்களுக்கு உட்படும். அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலமே இருக்கின்ற நிலையில் இத்தொகுதிகளில் தற்சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களால் குறுகிய காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
ஒரு அரசியல் இயக்கத்தின் ஜனநாயக கடமை, வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் போட்டியிடுவதுதான் என்றிருந்தாலும், இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதி விட முடியாது.
எனவே, 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளில் முழுமையான கவனம் செலுத்தி முழுமூச்சோடு செயல்படுமாறு தொண்டர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி ..
இதேபோல மனிதநேய மக்கள் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் சென்னையில் நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு 2011-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் எங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது.
இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.
அழைப்பு விடுத்த கம்யூ.வுக்கு நன்றி...
இளையான்குடி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் விடுத்த அன்பு வேண்டுகோள்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று அப்துல் சமது தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications