மன நோயால் பாதிக்கப்படும் முகாம் தமிழர்கள்
வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் வந்திருக்காது என்று கூறும் அளவுக்கு மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது ஈழத் தமிழர்களின் வாழ்க்கை.
முகாம்கள் என்ற பெயரில் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்கள். தடுப்பு வேலிகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ள அந்த அப்பாவி மக்களின் நிலை குறித்து அத்தனை பேரும் பரிதாபப்பட்டாலும் அவர்களுக்கு இதுவரை விமோச்சனத்தை ஏற்படுத்தித் தர மட்டும் யாரும் முன்வராத நிலை.
இந்த நிலையில், அங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட 46 சதவீதம் பேர் மன நல பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் ஈழத்தைச் சேர்ந்த மன நல மருத்துவர் டாக்டர் மகேசன் கணேசன்.
இவர் அங்கோடை மன நல மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்தப் பிரச்சினை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக இதை சரி செய்யாவிட்டால் தமிழ் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றம் அவர் எச்சரித்துள்ளார்.
மனநோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வவுனியா மருத்துவமனையில் இதற்கென தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம்.
முகாமிலுள்ள 40 சதவீத மக்கள் நாள்தோறும் இந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகம் பாதிக்கப்பட்ட பலர் அங்கோடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகிறார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், மற்றும் சமூக நலன் விரும்பிகளின் உதவியுடன் தமது மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருவதாகக் கூறிய மருத்துவர் கணேசன், பாதிக்கப்பட்ட பலர் உறவினர்களின் உதவி இன்றி அவலப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications