மதுரையில் பெண் போலீஸ்காரரை கட்டிப் போட்டு நகை கொள்ளை
மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸ்காரரை கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த நகைகள் வீட்டில் இருந்த ரொக்கம் ஆகியவற்றை மர் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் .
மதுரை தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிபவர் முருகேஸ்வரி (32). திருமணமாகாத இவர் அவனியாபுரம் பை-பாஸ் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
முருகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் முகமூடி அணிந்தபடி அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது முருகேஸ்வரியை அந்த கும்பல் கயிற்றால் கட்டி போட்டு , தாக்கியது.
பின்பு, முருகேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த 5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து கொண்டு அங்கிருந்து அந்த
கும்பல் தப்பி சென்றது.
இது குறித்து முருகேஸ்வரி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications