இன்போஸிஸ் அலுவலகத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

Infosys
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பந்தோபஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்ந்த பாதுகாப்பைப் பெறும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையைப் பெறுகிறது இன்போஸிஸ்.

தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் சிறப்புப் பயிற்சி பெற்ற 101 வீரர்கள் நாளை முதல் இன்போஸிஸ் அலுவலகத்தைப் பாதுகாப்பார்கள்.

இதேபோல ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ரிபைனரீஸ் அலுவலகத்துக்கும் சிஐஎஸ்எப்பின் சிறப்பு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பை ஏற்பதா இல்லையா என்பது குறித்து ரிலையன்ஸ் இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு ஆபத்து நேரும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்த சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே இத்தகைய பாதுகாப்பு இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+