போலீஸுக்கு சவால் விடும் மாஜி போலீஸ் அதிகாரிகள்!
சென்னை: சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளாக சேர்ந்து வருவதால், அந்த ஹோட்டல்களில் நடைபெறும் தவறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகிறதாம் காவல்துறை.
டெல்லியைச் சேர்ந்த மாடல் அழகியான ஜோதி சிங் என்பவர் சமீபத்தில் சென்னை காவல்துறையில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஒரு ஸ்டார் ஹோட்டலின் பப்புக்கு வெளியே தன்னை நான்கு பேர் நள்ளிரவு 1 மணியளவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வரும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளான பன்னீர் செல்வம், வள்ளிநாயகம், ரத்தினசபாபதி ஆகியோர் விசாரணைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஹோட்டல் மட்டுமல்லாமல் நகரில் உள்ள பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். தங்களது வசதிக்காக ஹோட்டல் நிர்வாகங்கள் இதுபோல செய்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது விசாரணைக்கு செல்லவோ முயன்றால் மாஜி போலீஸார் ரூபத்தில் இடையூறுகள் வருகிறதாம்.
பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட சில போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதால், தவறு செய்யும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இவர்கள் தடுத்து காப்பாற்றி விடுகின்றனராம்.
முன்னால் ஐபிஎஸ் அதிகாரிகளான நாஞ்சில் குமரன், பாலச்சந்திரன் ஆகியோர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனராம். ஆனால் இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இது வரவில்லை. ஆனால் பிற மாஜி போலீஸார், தாங்கள் பணியாற்றும் ஹோட்டல்களைக் காக்கும் வகையில் நடந்து கொள்வதாக புகார் கூறப்படுகிறது.
முன்னாள் காவல்துறையினர் பணியாற்றும் ஹோட்டல்களுக்கு செல்லக் கூட முடியாத நிலை இருப்பதாக உள்ளூர் இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றனராம்.
சமீபத்தில், ஒரு ஹோட்டலில் ரெய்டு நடத்த போலீஸ் படை சென்றபோது, அந்த ஹோட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் கூட போலீஸ் ஜீப்பை நிறுத்து விடாமல் கெடுபிடி செய்து வெளியேற்றி விட்டனராம்.
அரசு இதுகுறித்து தலையிட்டு நடவடிக்கை எடுத்தால்தான் தவறு செய்யும் ஹோட்டல் நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது சாத்தியம் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications