இங்கிலாந்து குடியுரிமை பெறுவது இனி கஷ்டம்!

இங்கிலாந்தில் இதுவரை, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால், அவர்கள் தாமாகவே இங்கிலாந்து பிரஜை என்ற அந்தஸ்தைப் பெற தகுதி படைத்தவர்கள் ஆகி விடுவார்கள்.
இந்த முறையை தற்போது இங்கிலாந்து அரசு ரத்து செய்துள்ளது. அதற்குப் பதில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது குடியுரிமை கோருவோருக்கு 'புரபேஷனரி' காலம் தரப்படும்.
அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள், தான் இங்கிலாந்து நாட்டுக்கு விசுவாசமானவர் என்பதை நிரூபிக்கும் வகையிலான சமூக சேவை உள்ளிட்டவற்றை குடியுரிமை கோருவோர் செய்தாக வேண்டும்.
புரபேஷனரி காலத்தில், அவர்களது கல்வித் தகுதி, சம்பாதிக்கும் திறமை உள்ளிட்டவற்றைப் பொறுத்து அவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கால கட்டத்தில் மோசமான நடத்தை கண்டறியப்பட்டால் புள்ளிகள் குறையும்.
புரபேஷனரி காலத்தில் 20 புள்ளிகள் பெறுவோர் மட்டுமே குடியுரிமை கோர முடியும். அதன் பின்னர் முழுமையான குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால், இங்கிலாந்தின் வாழ்க்கை முறை குறித்த அறிவு இருக்க வேண்டும். அதுதொடர்பான தேர்வில் பாஸ் ஆக வேண்டும். ஆங்கில மொழித் தேர்விலும் பாஸ் ஆக வேண்டும்.
இந்தப் புதிய முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications