பன்றிக் காய்ச்சல் பரவல்- நாளை கருணாநிதி தலைமையில் ஆலோசனை

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து நாளை இதற்கான உயர் மட்டக் குழு எனது தலைமையில் கூடி ஆலோசனை நடத்தும்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இதேபோன்ற ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. அதுபோல இங்கும் நடத்தப்படுகிறது.
பரவலைத் தடுக்கவும், இதுதொடர்பான சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. பீதி ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பது பத்திரிக்கையாளர்கள் மற்றும் படித்தவர்கள் கடமை என்றார்.
சென்னையில் 3 சிறப்பு மையங்கள்
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை நகரி்ல 3 சிறப்பு பன்றிக் காய்ச்சல் கண்டறியும் மற்றும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் தலா 30 டாக்டர்கள் அடங்கிய குழு நிலை கொண்டிருக்கும். மொத்தம் 90 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இங்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகப்படுவோர் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications