காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்கின்றனர்.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 7ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை.
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் காவிரியின் முகத்துவாரமான டெல்டா மாவட்டங்களை முழுவதுமாக வந்தடையவில்லை. 14 நாட்கள் ஆகியும் இதுநாள் வரை இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் வந்து சேரவில்லை.
இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ள நிலையிலும் அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யத் தவறிவிட்டனர். எனவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு 15,000 கன அடி தண்ணீரை தொடர்ந்து 3 வார காலத்திற்கு திறந்துவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications