இளையாங்குடியில் ஜெயா டிவி குழு மீது தாக்குதல்
இளையாங்குடி: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததைப் படம் பிடித்த ஜெயா டிவி குழுவினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேமரா உடைக்கப்பட்டது. மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமரா பாகங்களை எடுத்துக் கொண்டு திமுகவினர் தப்பி விட்டனர்.
இளையாங்குடி தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி என்ற இடத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ரூ 1 கோடி பணத்துடன் முகாமிட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக ரூ. 200, 2வது கட்டமாக ரூ. 500, 3வது கட்டமாக ரூ. 1000 தரப் போவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து அங்கு ஜெயா டிவி செய்தியாளர் ரகு தலைமையில் குழுவினர் விரைந்தனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை அவர்கள் படம் பிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த பணம் கொடுத்தவர்கள், சரமாரியாகத் தாக்கினர். கேமரா பறிக்கப்பட்டு கீழே போட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமராவை எடுத்துக் கொண்டு பணம் கொடுத்தவர்கள் தப்பி விட்டனர்.
இந்த சம்பவத்தால் திருப்பாலைக்குடியில் பரபரப்பு நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications