காங்கிரஸார் அடிதடி-பெண்கள் அலறி ஓட்டம்!
கடையநல்லூர்: தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேடை பார்வையாளராக கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாநவஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் நகர, வட்டார காங்கிரஸ் பிரமுகர்களை சந்திக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சின் அலுவலகத்திற்கு வந்தார். அவரை வரவேற்கவும், சந்திக்கவும், நூற்றுக்கனக்கான காங்கிரசார் வந்திருந்தனர். எம்எல்ஏ அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்தினரை செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிலிங்கம் ஓழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது நெல்லை மாவட்ட ராகுல்காந்தி பேரவை தலைவர் கணேசனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த காங்கிரஸ் மகளிர் அணியினர் சிதறி ஓடினர்.
சண்டையில் ஜோதிலிங்கத்தின் சட்டை கிழிந்தது. பீட்டர் அல்போன்சின் உதவியாளர் புலவர் செல்வராஜ், வட்டாரத் தலைவர் சுந்தரைய்யா, திவான் கடையநல்லூர் நகராட்சி தலைவர் இப்ராகீம் ஆகியோர் இருவரையும் அமுக்கிப் பிடித்து சமாதானம் செய்தனர்.
இருந்தபோதும் இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் மகளிர் அணியினர் கட்டிடத்திற்குள் நுழையாமல் ரோட்டிலேயே நின்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் பிரமுகர்களுக்குள் மேலிட பார்வையாளர் முன்பு நடந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications