அத்வானி பதவி விலக வலியுறுத்தவில்லை-ஆர்எஸ்எஸ்
சென்னை: அத்வானியை பதவி விலகுமாறு வலியுறுத்தியதாக வெளிவந்த செய்திகளை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மறுத்துள்ளார்.
பாஜக தலைவர் அத்வானியை கடந்த 10ம் தேதி மோகன் பகவத் தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அத்வானியை பதவியில் இருந்து விலகக் கூறியதாகவும், அடுத்து தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பகவத், வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று கூறிய அத்வானி, இது போன்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோகன் பகவத் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
பாஜக ஒரு தனி கட்சி. அதன் விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் தலையிட முடியாது. அந்த கட்சி விஷயங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எங்கள் வேலை இல்லை. நாங்கள் தேச சேவையை மட்டும் குறிகோளாகக் கொண்டு செயல்படுகிறோம்.
அத்வானி பதவி விலக வேண்டும் என நாங்கள் எந்த உத்தரவும் வழங்கவில்லை. நாங்கள் சந்தித்து கொண்ட போதும் நாட்டின் நன்மை குறித்து தான் பேசினோம். அரசியல் பேச இல்லை.
அத்வானி அனுபவம் வாய்ந்த தலைவர் அவருக்கு யாரும் ஆலோசனை சொல்ல தேவையில்லை. மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாட்டின் பாதுகாப்பு கவலைக்கிடமாக இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டு 84 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இது இயக்கம் ஜாதி, மத பகுபாடு இல்லாமல் மக்கள் சேவையில் முன்னிறுத்தி கொண்ட இயக்கம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள இந்து அமைப்புகள் மூலம் நிவாரணங்கள் வழங்க முயற்சித்து வருகிறோம் என்றார் மோகன் பகவத்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications