சென்னையில் 3 கிலோ தங்கம் கொள்ளை-ஒருவர் கைது, 7 பேருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கேரள நகைக்கடை ஊழியரை கட்டிப்போட்டி 3 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி பிடிபட்டுள்ளார். இதில் தொடர்புடைய மேலும் 7 பேரைப் பிடிக்க தனிப் படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

கேரளாவில் உள்ள திருச்சூர் நகைக்கடை ஒன்றிலிருந்து சென்னையில் உள்ள சில நகைகடைகளுக்கு தங்க கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக திருச்சூர் கடையை சேர்ந்த வினீத், சிண்டோ ஆகியோர் அடிக்கடி சென்னை வந்து செல்வது வழக்கம்.

சென்னையில் அவர்கள் வேப்பேரியில் இருக்கும் பிஷப் லேன் என்று அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் 3 கிலோ தங்க கட்டிகளுடன் அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் வழக்கம்போல் தங்கினர். சிண்டோ வெளியில் சென்றிருந்த நிலையில் அங்கு வந்த மர்மக் கும்பல் வினீதை தாக்கி, கட்டிப் போட்டுவிட்டு தங்க கட்டிகளை கொள்ளையடித்து கொண்டு தப்பியது.

இது குறித்து விசாரணை நடத்திய வேப்பேரி போலீசார், திருச்சூர் நகைக்கடையின் ஊழியர்கள் குறித்த விவரங்களை சேகரித்தபோது அதில், கேரள மாநிலம் சோட்டான்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நகைகடையில் வேலைக்கு சேர்க்கப்பட்டு மோசமான நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டவர்.

விசாரணையில் ராதாகிருஷ்ணன், சமீபத்தில் சென்னை வந்து அரும்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தமிழக போலீசார் கேரளா சென்று ராதாகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைகளைக் கொள்ளையடித்ததை அவர் ஒப்புகொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இத் திட்டத்தில் ராமகிருஷ்ணுக்கு உதவிய வினோத், அஜீத், விஜயன், முஜீப், அஜய் உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

தங்கக் கட்டிகள் இந்தக் கும்பல் வசம் இருப்பதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+