நர்ஸ் படிப்பு- 'பெண்கள் மட்டுமே சேரலாம்'
சென்னை: செவிலியர் படிப்பை பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசாத் அலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், நான் பிளஸ் 2 தேர்வில் 61 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு நடத்தும் செவிலியர் (நர்ஸ்) டிப்ளமோ படிப்புகளில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் 07.12.08-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டார்.
எல்லா மருத்துவமனைகளிலும் ஆண் செவிலியர்களுக்கு தேவை உள்ளது. செவிலியர் படிப்பில் 1:9 என்ற விகிதத்தில் ஆண், பெண் சேர்க்கை இருந்தது. செவிலியர் படிப்பிற்கு பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்த ஆண்டு விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைவருக்கும் சம உரிமை என்பதை மீறும் வகையில் உள்ளது. எனவே, எனக்கு விண்ணப்பம் வழங்க உத்தரவிட வேண்டும். செவிலியர் படிப்பில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், செவிலியர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகும் ஆண் செவிலியர்களை பெண்கள் விரும்பவில்லை. எனவே, மகப்பேறு மருத்துவத்தில் ஆண்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது.
மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சி பெறாமல், செவிலியர்களுக்கான படிப்பு முழுமையடையாது. எனவே, ஆண்களைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 2045-ம் ஆண்டு வரை மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு தேவையான ஆண் செவிலியர்கள் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசு முழுமையாக ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளது.
எனவே, சுகாதார நோக்கில் பார்த்தாலும், சமூக நல நோக்கில் பார்த்தாலும் பெண்கள் மட்டும்தான் செவிலியர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, இதுதொடர்பான அறிவிப்பாணை செல்லும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications