ஆன்லைன் வர்த்தகம்: தடைசெய்ய சரத்குமார் கோரிக்கை!
சென்னை: உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகமே. எனவே அதனை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரிசி விலை ஏற்கனவே இறக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கிறது. அதிக மக்கள் பயன்படுத்தும் சன்ன ரக அரிசி ஒரு கிலோ ரூ.20 முதல் 22 வரையாக இருந்தது இப்போது ரூ.35 முதல் 40 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஒரு கோடி டன் அளவுக்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மத்திய மந்திரி அறிவித்து இருப்பது நமக்கு எல்லாம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு என்ன காரணங்கள் என்பதை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கு தடை இருக்கின்றபொழுது பாசுமதி அரிசி மட்டும் பிரத்யேகமாக ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. பாசுமதி அரிசி என்கிற பெயரில் சன்னரக அரிசியும், சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுவிடாமல் மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்களின் பதுக்கல்!
ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற அரிசி ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்ற துவரம் பருப்பு ரூ.85-க்கும், ரூ.40-க்கு விற்ற உளுந்து ரூ.65-க்கும், ரூ.13-க்கு விற்ற சர்க்கரை ரூ.29 என உயர்ந்து இருப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
உலக அளவிலான நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், மோர் போன்ற நிறுவனங்களும் சில்லரை வணிக கடைகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றன. இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சேமிப்பு வரையறை இல்லை.
எனவே, பல்வேறு துறை தொழில்களில் ஈடுபடும் இந்த நிறுவனங்களிடம் பல லட்சம் கோடி புரள்கிறது. இவர்கள் அளவுக்கு மீறி பொருட்களை வாங்கி பதுக்கி வைக்கும் காரணங்களினாலும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தகம்!
உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஆன்லைன் வர்த்தகத்திற்கு இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்க வேண்டும். அரிசி விலை மேலும் உயர்ந்துவிடாமல் தடுக்கவும் முதல்வர் கருணாநிதி தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாவட்டந்தோறும் நெல் உற்பத்தியை அதிகப்படுத்திட அதிகாரிகளைக் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சரத்குமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications