world, afghanistan, election, president, karzai, obama, உலகம், ஆப்கானிஸ்தான், தேர்தல், அதிபர், கர்ஸா
காபூல்: அதிபர் தேர்தலில் எங்களுக்கே வெற்றி என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயின் தேர்தல் மேலாளர் அறிவித்துள்ளார். ஆனால் இதை எதிர்க் கட்சியினர் நிராகரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. தலிபான் தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களையும் மீறி 70 சதவீத வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தல் முடிந்தததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இருப்பினும் இதுவரை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தங்களது அணியே வெற்றி பெற்றுள்ளதாக கர்ஸாய் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்ஸாயின் தேர்தல் மேலாளர் டீன் முகம்மது கூறுகையில், ஆரம்ப கட்ட முடிவுகளைப் பார்க்கும்போது அதிபர் கர்ஸாய் மெஜாரிட்டி பெற்று விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் முடிவை தேர்தல் ஆணையம்தான் முறைப்படி அறிவிக்க வேண்டும்.
இரண்டாவது கட்ட வாக்கு எண்ணிக்கை தேவைப்படாது என்றே கருதுகிறோம். எங்களுக்கே மெஜாரிட்டி கிடைத்துள்ளது என்றார்.
ஆனால் கர்ஸாயை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் இதை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் பாஸல் சங்கசரகாய் கூறுகையில், இது உண்மையல்ல. நாங்களும் கூட 2வது சுற்று எண்ணிக்கை தேவையில்லை, அப்துல்லாதான் வென்று்ளார் என்று கூற முடியும். கர்ஸாய் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் யாரும் வெற்றி பெற்றதாக கூறிக் கொள்ள முடியாது என்றார்.
வாக்குகள் கிட்டத்தட்ட எண்ணி முடிக்கப்பட்டு விட்டாலும் கூட தேர்தல் முடிவுகள் தெரிய 2 வாரமாகும் எனத் தெரிகிறது.
தேர்தலுக்கு ஒபாமா பாராட்டு
இதற்கிடையே, தீவரவாதிகளின் அச்சுறுத்தலையும் தாண்டி தேர்தல் நடந்து முடிந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தலிபான் தீவிரவாதிகள் தேர்தலை சீர்குலைக்க கடுமையாக முயன்றனர். அதையும் தாண்டி தேர்தல் நடந்து முடிந்திருப்பது வெற்றிகரமான ஒன்று.
ஆப்கானிஸ்தானில் அடுத்து செய்ய வேண்டியது குறித்து அரசும், புதிய அதிபரும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அங்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகள் (தீவிரவாத ஒழிப்பு) முடிய சில காலம் பிடிக்கும் என்றே கருதுகிறேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications