Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி, பருப்பு, சர்க்கரையை பதுக்கினால்.. அரசு கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை வியாபாரிகள் வரம்பிற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்துவது, உணவுப் பதுக்கலை ஒழிப்பது ஆகியவை குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.

இதில் உணவுத் துறை முதன்மை செயலாளர் சண்முகம், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் வீரசண்முக மணி, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலத்தில் உணவுக் கையிருப்பு நிலை குறித்து ஆராயப்பட்டது.

சமீப காலமாக காரணமே இல்லாமல் துவரம் பருப்பு, சர்க்கரை போன்றவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதன் பின்னணியில் வியாபாரிகளின் பதுக்கல் நடவடிக்கைகளே காரணம் என்றும் நம்பப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து உணவு இருப்பு கட்டுப்பாடு ஆணைகளை தீவிரமாக அமல்படுத்த சிறப்பு குழுக்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு ஆணைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச இருப்பு வரம்பிற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் அப்பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் இருப்பு விவரங்களை மாதம் ஒருமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், துணை ஆணையருக்கு இருப்பு வைத்திருக்கும் வியாபாரிகள், நிறுவனங்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

மேலும் துவரம் பருப்பு தட்டுப்பாட்டை போக்கு கனடாவி் இருந்து அதை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் முறையாக நடப்பதை கண்காணிக்க சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் வாகனத்துடன் ஒரு சிறப்பு பறக்கும் படை ஒன்று தினசரி ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்

சென்னையில் சென்னை வடக்கு பறக்கும் படை குழுவினரை 9445045602 அல்லது 9445000152 என்ற எண்ணிலும், சென்னை தெற்கு குழுவினரை 9445045603 அல்லது 9445000160 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்தை 28592255 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+