ஆங்கில தேர்வு-வியட்நாமில் ஆசிரியர் மீது ஆசிட் வீசிய மாணவர் கைது
ஹனோய்: ஆங்கில தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவ மறுத்த ஆசிரியர் மீது ஆசிட் வீசிய மாணவன் கைது செய்யப்பட்டான். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வியட்நாமில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
ஹோ சி மிங் நகரில் உள்ள விவசாயம் மற்றும் வன பல்கலைக்கழகத்தில் கடந்த 2002ல் நான்கு ஆண்டு படிப்பில் டிரான் ஜூவன் தாங்க் என்ற மாணவர் சேர்ந்தார். 2006ல் அவரது படிப்பு காலம் முடிந்துவிட்ட போதிலும், அவர் ஆங்கில தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்த மாணவன் சமீபத்தில் அந்த கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தி கொண்டிருந்த டாங் ஹூ டங் என்ற புரோபசரை கையில் கத்தியுடன் தூரத்தி கொண்டு ஓடினான். பின்னர் அவர் மீது பெரிய பாத்திரத்தில் இருந்த ஆசிட்டை எடுத்து ஊத்தினான்.
இதில் அந்த புரோபசரின் உடலில் முக்கால்வாசி பாகம் வெந்து போனது. அவர் அலறி துடித்தார். அவர் தற்போது சோ ரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீசிய போது அந்த புரோபசருக்கு அருகில் இருந்த 13 மாணவர்கள் மீதும் ஆசிட் விழுந்து, அவர்களும் காயமடைந்தனர்.
5 லிட்டர் ஆசிட்...
இதையடுத்து போலீசார் அந்த மாணவனை கைது செய்தனர். அப்போது அவன் கொடுத்த வாக்குமூலம்,
சமீபத்தில் நான் புரோபசரை சந்தித்து ஆங்கில தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். உதவி செய்யுங்கள் என கேட்டேன். ஆனால், அவர் காலம் கடந்துவிட்டது என கூறி மறுத்துவிட்டார்.
இதனால் எனக்கு அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஒரு பாத்திரத்தில் 5 லிட்டர் ஆசிட்டை எடுத்து சென்று அவர் மீது ஊற்றினேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications