பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83 ஆனது
டெல்லி: இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை மராட்டிய மாநிலம் புனே நகரில், பன்றி காய்ச்சலால் 43 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை அருகே எல்.கே.ஹிராநந்தானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தீப் கெய்க்வாட் (28) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரை சேர்த்து மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் (38), வெங்கடேஷ் (45), பி.முனிரத்தினம் (48), புஷ்பலதா பக்தீஷ் (35) ஆகியோர் உயிர் இழந்தனர்.
கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
3273 பேர் பாதிப்பு:
இதற்கிடையே நாடு முழுவதும் 3273 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 177 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 52 பேர், மகாராஷ்டிராவில் 31, டெல்லியில் 30, கர்நாடகம் 22, கேரளா 15, உ.பி. மற்றும் ஆந்திராவில் தலா 7 பேருக்கு நேற்று ஸ்வைன் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று உறுதி செய்யப்பட்ட 177 பேரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டிலிருந்து நோய் பாதிப்புக்கு ஆளாகி வந்தவர். மற்ற அனைவரும் உள்ளுக்குள்ளேயே பரவிய வைரஸ் பாதிப்பால் தாக்கப்பட்டவர்கள்.
இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான பாதிப்பு உள்ளது. அங்கு 1575 பேருக்கு பன்றிக் காய்சச்ல் பாதிப்பு உள்ளது. டெல்லியில், 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications