போர்வெல்லில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சாவு
தண்டாரம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தான்.
அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுபிள்ளை. அவரது மனைவி கல்வி. இவர்களுக்கு அபிநயா (6) என்ற மகளும், கோபிநாதன் (3) என்ற மகனும் உள்ளனர்.
அண்டம்பள்ளம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பதினேழரை அடி ஆழம் வரை போர்வெல் அமைக்கப்பட்டு இருந்தது. அதை சாக்கைக் கொண்டு மூடி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் கோபிநாதன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் கால் வைத்ததில் தவறி விழுந்து விட்டான்.
உடனே தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சிறுவன் விழுந்த கிணற்றுக்கு அருகே 20 அடிக்கு பள்ளம் வெட்டப்பட்டது.
பின்னர் சிறுவன் விழுந்த இடம் நோக்கி குறுக்காக பவர்டில்லர் இயந்திரம் மூலம் மணலை தோண்டும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான்.
மயங்கிய நிலையில் இருந்த அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் கோபிநாதன் பரிதாபமாக உயிரிழந்தான்.
உயிருடன் மீட்கப்பட்டும், மருத்துவமனையில் சிறுவன் இறந்து போனதால் அண்டம்பள்ளம் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications