காவல் நிலையம் அருகே ஜவுளிக்கடையில் ரூ. 4 லட்சம் கொள்ளை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் துணி வகைகளோ, சில்லரை வகைகளோ கொள்ளை போகவில்லை.
நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் பிரபல ஜவுளி கடை ஓன்று உள்ளது. இது 3 அடுக்கு மாடி கொண்டது. 3வது மாடியில் பின்புறம் கம்பிவலை மற்றும் கிரில் கேட் போடப்பட்டுள்ளது.
இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஊழியர்கள் 3வது மாடியில் உள்ள கம்பி வலை அறுக்கப்பட்டு கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கீழ்தளத்தில் கவுன்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். டிஎஸ்பி சிவபாதமும் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த கைரேகை பதிவு செய்யப்பட்டது. கம்பி வலையை அறுத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இந்த கடையில் நேற்று ரூ. 50 ஆயிரத்தை சில்லரையாக மாற்றி வைத்திருந்தனர்.
இதை கொள்ளையர்கள் எடுக்கவில்லை. அதே போல விலை உயர்ந்த துணிகளும் அப்படியே இருந்தன. நகரில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இடத்தில் இந்த ஜவுளிகடை உள்ளது. சிறிது தூரத்தில் கோட்டார் போலீஸ் நிலையம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையம் உள்ளது.
ஆனால் அதை மீறி கொள்ளையர்கள் துணிச்சலாக இந்த கொள்ளையை நடத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications