2 மார்வாடி குடும்பங்கள் மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தொழில்போட்டி காரணமாக சென்னையில் அடகு வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய மற்றொரு அடகு வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் வசித்து வருபவர் கைலாஷ் சந்த் (56). இவருக்கு சஞ்சுதேவி(45) என்ற மனைவியும், விசித்ரா(15), திரிஸ்லா(13), ரகானா(11) மற்றும் சித்தாந்த்(9) என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அடகு வியாபாரம் செய்து வரும் கைலாஷ் சந்த் என்பவருக்கும் மற்றொரு அடகு வியாபாரியான கொட்டிவாக்கம் பாபுலால் என்பவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையி்ல் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு கைலாஷ் வீட்டுக்கு வந்த பாபுலால் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது பாபுலால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கைலாஷ் சந்த்தை வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அதை தடுக்க வந்துள்ளனர். ஆத்திரம் கொண்ட பாபுலால் அவர்களையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் கைலாஷ் சந்தின் மகன் சித்தாந்தை தவிர மற்ற அனைவரும் காயமடைந்தனர். கைலாஷ் சந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபுலாலை தேடி வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications