Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக கிராமங்களில் தங்கும் ராகுல்!

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
சென்னை: தமிழகம் வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் இரவில் கிராமங்களில் தங்க விரும்புவதாக கூறியுள்ளதால், சென்னை மற்றும் மதுரையில் அவருக்கேற்ற பாதுகாப்பான கிராமத்தை போலீஸாரும், அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸைத் தட்டி எழுப்பவும், புத்துணர்ச்சியுடன் புது நடை போட வைக்கவும் ராகுல் காந்தி பிரம்மப் பிரயத்தன முயற்சிகளில் முதல் முறையாக இறங்கியுள்ளார்.

பல்வேறு கோஷ்டிகளாகவும், பல்வேறு தலைவர்களாலும் பாழடைந்து போயிரும் காங்கிரஸ் கட்சியை தூசு துட்டி துடிப்புடன் செய்பட வைக்க ராகுலின் பயணம் உதவும் என காங்கிரஸார் குறிப்பாக இளைஞர் காங்கிரஸார் நம்புகின்றனர்.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் மையம் கொண்டு சூறாவளிப் பயணம் மேற்கொள்கிறார் ராகுல்.

தமிழக நகரங்களில் ராகுலின் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு இடத்திலும் ராகுல் சந்திக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற தொகுதி வரை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் மட்டுமே இந்தபட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சுமார் 1500 முதல் 2000 இளைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

தனது சுற்றுப்பயணத்தின் போது தலைவர்- தொண்டர் என்ற இடைவெளி இல்லாமல் இளைஞர்களுடன் சாதாரணமாக பேச விரும்புகிறார். கட்சியின் நிறை, குறைகள், நாட்டு வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்பதை இளைஞர்களிடம் கேட்டு அறிய திட்டமிட்டுள்ளார். எனவே இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர்களுக்கு அனுமதி இல்லை.

நாளை இரவு மதுரையிலும், 9ம் தேதி இரவு சென்னையிலும் தங்கவுள்ளார் ராகுல் காந்தி. இந்த இரு இடங்களிலும் தான் கிராமத்தில் தங்க விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாராம்.

இதையடுத்து ராகுல் காந்திக்காக இந்த இரு நகரங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அவற்றிலிருந்து 6 கிராமங்களைத் தேர்வு செய்து வைத்துள்ளனர். இந்தக் கிராமங்களின் பெயர்களை என்.எஸ்.ஜி. படையினரிடம் கொடுத்துள்ளனர்.


இதையடுத்து இந்தக் கிராமங்களுக்கு உள்ளூர் சிஐடி போலீஸாரும், மத்திய உளவுப் பிரிவினரும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ராகுல் எந்தக் கிராமத்தில் தங்கப் போகிறார் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையும், சென்னையில் ராஜ்பவனும் மாற்று தங்குமிட ஏற்பாடக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி உ.பி செல்லும்போதெல்லாம் ஏதாவது கிராமத்தில் தங்குகிறார் என்பது நினைவிருக்கலாம். அவரது இந்த அப்ரோச் அங்குள்ள மக்களை, குறிப்பாக தலித் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், தமிழகத்திலும் தனது ஸ்டைலை அப்ளை பண்ணிப் பார்க்க ராகுல் விரும்புவதாக தெரிகிறது.

ராகுலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு:

இந் நிலையில் தமிழகம் வரும் ராகுலுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9.40 மணிக்கு திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், நாகர்கோவில் வருகிறார்.

அங்குள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து சேருகிறார். பின்னர் 1200 மீனவ இளைஞர்கள் கலந்து கொள்ளும் இளம் மீனவர்கள் கூட்டத்தில் முற்பகல் 11.30 மணிக்கு அவர் பங்கேற்கிறார்.

இதையடுத்து பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினரும், என்.எஸ்.ஜி. படையினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். என்.எஸ்.ஜி. எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நாகர்கோவில் வந்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் நேரடியாக கண்காணிக்கின்றனர். கமாண்டோ படையினர், என்.எஸ்.ஜி மற்றும் மத்திய உளவுத் துறை, மாநில உளவுத்துறை போலீசார், மாநில போலீசார், உள்ளூர் போலீசார் என்று ராகுல்காந்திக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

நெல்லையில்...

நாகர்கோவில் பயணத்தை முடித்து விட்டு பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி புறப்பட்டு, நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்குகிறார்.

நெல்லையில் நடைபெறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பின்னர், விவசாயிகள், பீடித்தொழிலாளர்கள், வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.

இதையடுத்து நெல்லை முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

பாளையங்கோட்டை ஆயுதப் படை மைதானம், நூற்றாண்டு மண்டபம், சாராள் தக்கர் பள்ளி ஆகிய இடங்களில் இன்று இரண்டாவது நாளாக வெடிகுண்டு சோதனை நடத்தப்ப்டடது. மேலும், லாட்ஜ்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை நடத்தப்பட்டது.

ராகுல்காந்தி வந்து இறங்கும் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் ஓத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும், நிகழ்ச்சி நடக்கும் அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது.

முகாம்களில் கூடுதல் கண்காணிப்பு...

பாளை பெருமாள்புரம், கோபாலசமுத்திரம், நாராணம்மாள்புரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை...

நெல்லை பயணத்தை முடித்துக் கொண்டு விருதுநகர் செல்லும் ராகுல்காந்தி, அங்கு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் இளைஞர்களை சந்திக்கிறார்.

பின்னர், மதுரை செல்கிறார். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத காரும் வரவழைக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். செல்போன் உள்ளிட்ட எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லாமல் வெறும் கையுடன் செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+