தேனியில் 110 பவுன் நகை கொள்ளை
தேனி: தேனி அருகே சின்னமனூரில் தொண்டு நிறுவன அதிபர் வீட்டில் 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ஸ் என்ற பெயரில் தொண்டு நிறுவனம், கல்வி நிறுவனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம் நடத்தி வருபவர் பச்சைமால்.
இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக திசையன்விளைக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டு வேலைகளை செய்ய வந்த வேலைக்கார பெண் பரமேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பச்சைமாலுக்கு தகவல் கொடுத்தார்.
கொள்ளையர்கள் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாவிகளை எடுத்து வீட்டிலிருந்த ஏழு பீரோக்களை திறந்துள்ளனர். அதில் இருந்த 110 பவுன் நகை, ரூ. 47 ஆயிரம் பணம் ஒன்றேகால் கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications