அரசியலுக்கு யாரும் வரலாம்-விஜய்காந்த்
சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று பிறந்த 330 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் டெபாசிட் திட்டத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 90 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 நிதியை எல்.ஐ.சியில் டெபாசிட் செய்து அதற்கான பத்திரங்களை குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், என் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறேன்.
சேலத்தில் வறுமை காரணமாக அடிக்கடி பெண் சிசு கொலைகள் நடக்கின்றன. இது போன்ற கொடுமைகளைத் தடுக்கவே என் சொந்தப் பணத்தில் தேமுதிக டிரஸ்ட் மூலம் பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் திட்டத்தை துவக்கியுள்ளேன்.
ஆளும்கட்சியினர் அதே போல தங்கள் சொந்தப் பணத்தில் நல்ல காரியங்களை செய்கிறார்களா?.
இந்த விழா மூலம் செல்வந்தர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஒவ்வொரு செல்வந்தரும் தனது பிறந்தநாளில் தங்கள் ஊரில் வாழும் ஏழைகளின் பெண் குழந்தைகளுக்கு இதுபோல டெபாசிட் செய்ய முன் வர வேண்டும் என்பதே.
இப்போது நான் செய்த டெபாசிட், 20 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் குழந்தை வளர்ந்து நிற்கும்போது அவருக்கு ரூ. 2 லட்சமாகக் கிடைக்கும். அதை வைத்து அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்தலாம் என்றார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்:
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று பதிலளித்தார்.
அதே போல நதிகளை இணைக்கக் கூடாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த விஜய்காந்த், அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், நதிகள் இணைப்பு என்பது மிக மிக அவசியமானது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications