ஆம்பூரில் கடும் வெள்ளம்-5 பேர் பலி-20 பேர் நிலை என்ன?

ஆம்பூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், சாலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.
பாலாற்றில் இணையும் இந்த கால்வாய் தான் இப் பகுதியின் பெரிய வடிகாலாகும்.
இந் நிலையில் ஆம்பூரில் நேற்று பெய்த கனமழையால் நாயக்கனேரி மலையில் உள்ள ஆனைமடுகு அணை நிரம்பியது. அதிலிருந்து காட்டாற்று வெள்ளம் கானாறு கால்வாய் வழியாக ஓடியது.
இந்த நீர் கால்வாயைத் தாண்டி குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. நள்ளிரவில் மழையும் வெள்ளமும் அதிகரிக்கவே குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின.
மின்சாரமும் தடைபட்டுவிட்டதால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் அதிகரித்த வெள்ளத்தில் பல குடிசைகளை அடித்துச் செனல்பப்பட்டன.
இதில் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தாலும் மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளை மிகுந்த கடும் சிரமத்துக்கிடையே மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளத்தில் தவித்த பலரை கயிறு கட்டி மீட்டனர்.
ஆனாலும் மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகிவிட்டனர். இன்று காலை கானாறு வடிகால் மற்றும் பாலாற்றில் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் சிக்கியன. அவர்கள் அமானுல்லா என்பவரின் மனைவி முன்னி (25), மகள் ஷானு (6), மகன் அக்பர் (3) என்று தெரிய வந்துள்ளது. அமானுல்லாவை காணவில்லை. அவர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பாலாற்றில் சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களும் சிக்கின. இதில் ஒருவர் இலியதுல்லா (16) என்புறு தெரியவந்துள்ளது.மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
வெள்ளம் அரசு பஸ் டெப்போவுக்குள்ளும் புகுந்ததில் அங்கிருந்த 10 பஸ்களும் நீரில் முழ்கியுள்ளன.
அதே போல கிருஷ்ணகிரியில் பெய்த மிக பலத்த மழையால் ஒசூர்-பாகலூர் இடையிலான தரைப் பாலமும் முழுமையாக உடைந்துவிட்டது. இதனால் இப் பகுதியிலிருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் பெங்களூர் வழியாக செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதே போல ஒசூர், தளி ஆகிய பகுதிகளிலும் மிக கனத்த மழை பெய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications