இந்தியா, சீனா..கிழக்கில் கிடைத்த புதிய நண்பர்கள்-இலங்கை
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற கிழக்கிலிருந்து கிடைத்த புதிய நண்பர்களான சீனா மற்றும் இந்தியா போன்றவை உதவியதாக ஐ.நாவுக்கான புதிய இலங்கை தூதர் பலிதா கோஹனா தெரிவித்துள்ளார்.
ஐநாவுக்கான புதிய இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் பலிதா கோஹனா நியூயார்க் சென்றுள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் அளித்த ஒரு பேட்டியில்,
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது மேற்கத்திய நாடுகள் இலங்கையை விட்டு விலகி செல்ல துவங்கின.
அமெரிக்கா மில்லினியம் சாலஞ்ச் அக்கவுன்ட் என்ற உதவி திட்டத்தை விலக்கி கொண்டது. இதனால் நாங்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க இருந்தோம்.
அப்போது மிரட்டலுக்கு அஞ்சுவது அல்லது புலிகளுடன் சமாதானம் பேசுவது அல்லது கிழக்கு நாடுகளின் உதவியை நாடுவது என மூன்று வாய்ப்புகள் இருந்தது. அதில் மூன்றாவது வாய்ப்பை தேர்வு செய்தோம்.
இந்தியா, சீனா, ஈரான், லிபியா போன்ற நாடுகள் கொடுத்த முழுமையான ஆதரவு காரணமாக தான் எங்களால் புலிகளை ஒழிக்க முடிந்தது.
இதையடுத்து நாங்கள் எங்களது பாரம்பரிய தொடர்புகளை கிழக்கு நோக்கி தொடர ஆரம்பித்தோம். அது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications