சென்னையில் 180 ஏக்கரில் அமையும் நிதி நகரம்
சென்னை: சென்னையில் நிதி நகரம் அமைக்க சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் அருகே கையகப்படுத்தப்படவுள்ள 180 ஏக்கர் நிலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, இந்த நிதி நகரை உருவாக்குவது குறித்து அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்த நிதி நகர திட்டத்திற்கான வரைப்படம் உருவாக்குவதற்கு டிட்கோவிற்கு உதவி புரிய நிதி, வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதியகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி நகரில் பயிற்சி மையங்கள், அலுவலர் பயிற்சி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களும் இடம் பெற்றிருக்கும்.
உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடனான இந்த நகரத்தை அமைக்க சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் கிராமங்களில் சுமார் 180 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின் இன்று சோழிங்கநல்லூரில் இந்த திட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தொழில்துறை முதன்மைச் செயலாளர் பரூக்கி, டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனிதா பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications