கோவையில் 'ஐஸ் பால் வெடிகுண்டு' - போலீசார் அதிர்ச்சி!
கோவை: கோவை மில் உரிமையாளர் வீட்டு மாடிப்படியில் துணியால் சுற்றப்பட்ட, திரியுடன் கூடிய ஐஸ் பால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை - அவினாசி ரோடு, விஸ்கோஸ் டவருக்கு எதிரில் வசிப்பவர் ஷ்யாம் (43), மில் உரிமையாளர். இவர் வீரகேரளத்தில் பஞ்சாலை நடத்துகிறார். இவரது வீட்டின் மேல் தளத்தில் அலுவலகம் உள்ளது. அலுவலகத்துக்கு செல்ல கிரில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவரது வீட்டு வேலைக்காரப் பெண் முத்துலட்சுமியின் மகன் விக்னேஷ் (11),நேற்று காலை அலுவலக படிக்கட்டில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அலுவலக கதவு அருகே முதல் படியில் சாம்பல் நிறத்துணியால் சுற்றப்பட்ட உருண்டையான பொருள் இருந்ததை எடுத்து விளையாடினான்.
அப்போது அங்கு வந்த, மற்றொரு தொழிலாளியின் மகன் மோகன்ராஜ் (20), விக்னேஷை அழைத்து, அவன் கையில் இருந்த பந்தை வாங்கிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலிருந்த துணியை பிரித்தபோது, உள்ளே ஐஸ்கிரீம் பால் இருந்தது. அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டு, நைந்து போன திரியால் இணைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உடன், துப்பறியும் போலீஸ் மோப்ப நாயும் அழைத்துச் செல்லப்பட்டது.
இரண்டு மணி நேர சோதனைக்குப் பின்பு போலீசார் ஐஸ் பால் வெடிகுண்டை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2008, டிசம்பர் 10 ம் தேதி வடகோவை ரயில்வே டிராக்கில் இதே போன்று ஐஸ் பால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications