வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியாவில் தேர்வு
டெல்லி: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து ஹார்வேர்டு, ஜான் ஹாப்கின்ஸ் என உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் என எங்கு படித்திருந்தாலும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே இநதியாவில் டாக்டராக பயிற்சி செய்ய முடியும்.
நேபாளம் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2002 மார்ச் 15ம் தேதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டது.
இதை எதிர்த்து நேபாள மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பஞ்சல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அந்த மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில்,
இந்திய குடிமகனாக இருப்பவர்கள் வேறு நாடுகளில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் டாக்டராக பணியாற்ற நினைத்தால், இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வு முறைகளை பின்பற்ற வேண்டும்.
அதில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற அனுமதியளிக்கப்படும். இது 2002 மாரச் 15ம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டில் படிப்பு முடித்தவர்களுக்கு பொருந்தும். அவர்கள் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்.
பல நாடுகளில் அளிக்கப்படும் மருத்துவ கல்லூரிகளின் இந்தியாவின் தரத்துக்கு இல்லை. இதனால் இந்த தேர்வுகள் அவசியம் என்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications