விளாத்திகுளம்-மாஜி எம்எல்ஏ தம்பி படுகொலை
விளாத்திகுளம் விளாத்திகுளம் அருகே திமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த சங்கர்ராமன் மகன் குமரகுருபர ராமநாதன். 1984-1989 வரை விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது மதிமுகவில் இருந்து வருகிறார்.
இவரது தம்பி ராஜராஜன் ரெட்டியார், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியில் சென்ற ராஜராஜன் இரவில் வீடு திரும்பவில்லை. பெரும்பாலும் அவர்களது உறவினர்கள் வீடுகளிலோ அல்லது அண்ணன் வீட்டி்லோ தங்கி விடுவார். நேற்றும் இதே போல் யார் வீட்டிலாவது தங்கியிருப்பார் என கருதிய குடும்பத்தினர் அவரை தேடவில்லை.
இன்று காலையும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது செல்போனுக்கு மனைவி கிருஷ்ணகுமாரி தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜராஜன் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளாரா என போனில் விசாரித்த போது அவர் வீட்டிற்கு வரவில்லை என தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியைடந்த அவரது உறவினர்கள் ராஜராஜனை தீவிரமாக தேடினர். இந்நிலையில் அரியநாயகிபுரம் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள கரிசல் காட்டு பகுதியில் ராஜராஜன் கழுத்தில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறி்த்து விளாத்திகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டிஎஸ்பி சியமளை தேவி, இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைநது உடலை கைப்பற்றி விளாத்திகுளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜராஜன் எதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications