ஜி-20 மாநாடு - இன்று மன்மோகன் சிங் அமெரிக்கா பயணம்
டெல்லி: ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
பிரதமருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
செப்டம்பர் 24 முதல் 25 வரை பிட்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும் மன்மோகன் சிங் சந்திப்பார்.
நிதிச் சந்தைகளை வலுப்படுத்துவது, உலகப் பொருளாதார மீட்சி உள்ளிட்ட முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
சிக்கணம் - ஆள் குறைப்பு...
இந்த நிலையில், மத்திய அரசின் சிக்கண நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமருடன் அமெரிக்கா செல்லும் குழுவிலிருந்து சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தற்போது சிக்கண நடவடிக்கையை கையாண்டு வருகிறது. மத்திய அமைச்சர்கள் விமான பயணம் மேற்கொள்ளும்போது எகானமி வகுப்பில்தான் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜி 20 மாநாட்டுக்காக இன்று நான்கு நாள் அமெரிக்க பயணம் கிளம்புகிறார் பிரதமர். அவரது குழுவில் பத்திரிக்கை செய்தி அமைப்பு (பிஐபி), தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ, பிலிம்ஸ் டிவிஷன் ஆகியவற்றைச் சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் தற்போது பிஐபி, வெளியுறவுத்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி, தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவைச் சேர்ந்த தலா ஒரு நிருபர், பிலிம் டிவிஷனைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications