ரூ. 1.23 கோடி மோசடி-தூத்துக்குடி பிஷப் மீது வழக்கு!
தூத்துக்குடி: தூத்துக்குடி சிஎஸ்ஐ டயோசீசன் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களிடம் வசூலித்த ரூ. 1 கோடி 23 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக பிஷப் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நாசரேத்தில் உள்ள சிஎஸ்ஐ டயோசீசன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடந்த 1.4.2007 முதல் 31.3.2009 வரை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் 2 சதவீதத்தை பிஷப் உத்தரவின் பேரில் கட்டாய பிடித்தம் செய்யப்பட்டது.
இதில் வசூல் செய்யப்பட்ட ரூ. 1 கோடியே 23 லட்சம் கணக்கில் வரவில்லை என்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து தென்னிந்திய திருச்சபை உறுப்பினர் மற்றும் ஊழியர் நலச்சங்க செயலாளர் தூத்துக்குடி சோப்பர் ஜோதிபால் (40), பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஜேஎம்-1 நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் (59), பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் (61), செயலாளர் மாணிக்கம் (58) மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சாமுவேல் ஞானதுரை (43), தேவசகாயம் (56), சுரேஷ் தங்கராஜ் சாம்சன் (41), தேவி அசோக் சுந்தர்ராஜ் (59), இர்வின் சார்லஸ் (54) ஆகிய 8 பேர் மீது மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications