995 ஏக்கர் நில மோசடி-சார் பதிவாளர் கைது
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் பகுதியில் 995 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்க உடந்தையாக இருந்த சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம், குப்பனாபுரம், ஓம் சரவணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 995 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களுக்கு தெரியாமல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது.
இதையடுத்து நிலத்தின் சொந்தக்காரர்கள் சுமார் 50ககும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து கடந்த 5ம் தேதியன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த மோசடியில் நேரடியாக தொடர்பு இருப்பதாக சம்பவம் நடந்த தினத்தில் கடம்பூர் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்த தலைமை எழுத்தர் முனியசாமி என்பவரையும், விருதுநகரை சேர்ந்த பத்திர எழுத்தர் பாலகிருஷ்ணன் என்பவரையம் குற்ற பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications