ஸ்வைன்: ஒரே நாளில் 13 பேர் பலி-இந்தியாவில் 277 ஆக உயர்வு
டெல்லி: பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5, மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 3, உத்தரகண்டில் 1 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் நேற்று 2 பேர் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்கள். மேலும் அங்கு முன்னதாக இறநத 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில புனே, நாசிக், மும்பை மற்றும் நாக்பூரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பெங்களூரில் இருவரும், உடுப்பியில் ஒருவரும் இறந்துள்ளனர்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் 112, கர்நாடகாவில் 85, ஆந்திராவில் 28 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் சுமார் 283 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 113 பேருக்கு தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 65 பேர் பள்ளி மாணவர்கள் என்பதலா டெல்லியில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 43, மகாராஷ்டிராவில் 35, தமிழகத்தில் 34, ஹரியானாவில் 25, கர்நாடகாவில் 22 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications