தனியார் மருத்துவமனையில் பணி-அரசு டாக்டர்களுக்கு தடை
புதுக்கோட்டை: தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசின் உயிர் காக்கும் உயர்சிகிச்சை திட்டம், மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 16 லட்சத்து 98 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதே போன்று இலவச ஆம்புலன்ஸ் 108 சேவையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது .
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை, 1,223 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 44 பேர் மட்டுமே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமைடந்து வீடு திரும்பிவிட்டனர்.
28 ஆயிரத்து 468 பேருக்கு வேலை...
காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, தனிப்பயிற்சி பெற்ற டாக்டர்கள் உட்பட 28 ஆயிரத்து 468 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் பணிநேரத்தின் பெரும் பகுதியை தனியார் மருத்துவமனைகளில் செலவிடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.
எனவே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவைப் போன்று தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடைவிதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications