பிறந்த நாளில் அரசியலுக்கு அத்வானி முழுக்கு!?
டெல்லி: அரசியலில் இருந்து அத்வானி விரைவில் ஓய்வு பெற இருப்பதாக ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவரும், உடுப்பி மடாதிபதியுமான சுவாமி விஸ்வேஷ் தீர்த்தர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தன்னை சந்தித்த அத்வானி இது தொடர்பாக தன்னிடம் பேசியாகதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
விஸ்வேஷ் தீர்த்த சுவாமிகள் கூறுகையில், அத்வானி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால், எப்போது என்று கூறவில்லை. விரைவில் ஓய்வு பெற்று விடுவேன் என்று தான் தெரிவித்தார்.
நாட்டுக்கும், பாஜகவுக்கும் அவரது சேவை தேவைப்படுவதால் அவர் ஓய்வு பெற வேண்டாம் என நான் கேட்டு கொண்டேன் என்றார்.
சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாஜகவில் தலைவர் பதவிக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து பாஜகவின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் மனோகர் பாரிகர், அத்வானி ஊசி போன ஊர்க்காய். அவர் ஓய்வு பெற வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
இதையடுத்தே தான் அத்வானியின் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அத்வானி தனது ஓய்வு பெறும் முடிவை வரும் நவம்பர் 8ம் தேதி தனது பிறந்தநாளில் அல்லது டிசம்பர் 25ம் தேதி வாஜ்பாய் பிறந்தநாளில் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
அரசியல் சாயம் பூச வேண்டாம்...
இந் நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
சாதுக்களையும், சன்னியாசிகளையும் சந்தித்து ஆசி பெறுவது பாஜக தலைவர்களின் வழக்கம். அத்வானி, உடுப்பி மடாதிபதி சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications