சோபியான் கற்பழிப்பு - 2 பெண்களின் உடல்கள் தோண்டியெடுத்து பரிசோதனை
சோபியான் (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் கற்பழித்துக் கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சோதிப்பதற்காக உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன.
சோபியான் பகுதியைச் சேர்ந்த நீலோபர் ஜான் மற்றும் அவரது மைத்துனி அசியா ஜான் ஆகியோர் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதைக் கண்டித்து காஷ்மீரில் கிட்டத்தட்ட 47 நாட்கள் பெரும் போராட்டம் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் பெயரும் இதில் இழுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இருவரது உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து டிஎன்ஏ மாதிரிகளை சோதிக்க மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம் - இவர்களின் உடல்களில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் முரண்பாடான தகவல்களை வெளியிட்டதே.
உடல்களை மீண்டும் தோண்டியெடுக்கும் உத்தரவைப் பிறப்பித்த மாஜிஸ்திரேட், கான்டே கூறுகையில், உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மக்கள் ஆதரவு இதற்கு உள்ளது. தவறு செய்த டாக்டர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இதையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு புதிதாக தடயவியல் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து சோபியான் உள்ளூர் மக்கள் கமிட்டி தலைவர் முகம்மது ஷபி கான் கூறுகையில், சிபிஐயை நாங்கள் நம்புகிறோம். உடல்களை மீண்டும் தோண்டியெடுக்கும் முடிவு சரிதான். இதன் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications