சொத்துத் தகராறில் மோதல் - போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
திண்டுக்கல்: சொத்து தகராறில் போலீசார் குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதலில் ஏட்டு உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள குரும்பபட்டி. இங்கு வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவரது உடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்களுக்கு நொச்சி ஓடைப் பட்டியில் சொந்த நிலம் உள்ளது. இதை பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த போது, தகராறு ஏற்பட்டது.
இதில், இவரது மூத்த அண்ணன் ராஜா, அவரது மனைவி காளியம்மாள், தம்பி செல்வம், செல்வத்தின் மனைவி அனார்கலி, ராஜாவின் மகன் ராஜாசந்திரன் ஆகியோர் அரிவாளால் பாண்டியராஜனை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதில் பாண்டியராஜனுக்கு இடது உள்ளங்கை, முழங்கை, வலது ஆட் காட்டி விரல், முதுகு பகுதிகளில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த சகோதரர் அழகுமலை ராஜாவுக்கு வயிற்றில் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏட்டை வெட்டிய ராஜா மற்றும் அவரது மகனை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications