Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய்-மகன் கொலை: கணவரின் நண்பர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

Anandalakshmi with Family
சென்னை: சென்னை அசோக்நகரில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாருக்கு 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு நபர் தலைமறைவாக உள்ளதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அனந்த லட்சுமி (39) மற்றும் அவரது மகன் சூரஜ் (12) ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இருவரும் கத்திரி கோலால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர். அனந்த லட்சுமி அணிந்திருந்த 25 பவுன் நகையும், ரூ. 20,000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தி்ல் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளும், ரூ. 50,000மும் அப்படியே இருந்தன. எனவே இந்தக் கொலை நகை- பணத்துக்காக நடைபெறவில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதில் கேரள ஜோதிடர் சந்தோஷ், அனந்த லட்சுமியின் கணவரான ராமசுப்பிரமணியின் நண்பர்கள் கணேஷ், கிறிஸ்டோபர். அவர்கள் மூலம் அனந்த லட்சுமிக்கு அறிமுகமான நண்பர் வேல்முருகன் ஆகியோர் மீது சந்தேகம் வலுத்தது.

கணவன்-மனைவி பிரிந்திருக்க வேண்டும் என்ற இந்த ஜோதிடர் சொன்னதை நம்பித்தான் ராமசுப்பிரமணியன் பெங்களூரிலும் அனந்த லட்சுமி சென்னையிலும் பிரிந்து தங்கியுள்ளனர்.

இதில் வேல்முருகன் சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தவர்.

அனந்த லட்சுமியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், அவர் பேசிய நபர்கள் ஆகியோர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த 4 பேரும் அனந்த லட்சுமியிடம் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசியது தெரியவந்துள்ளது.

இதில் 3 பேர் சென்னையில் உள்ளனர். ஆனால், வேல்முருகன் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அங்கும் இல்லை.

சமீபகாலமாக மருந்து விற்பனை பிரதிநிதி வேலையையும் இவர் விட்டுவிட்டாராம். தலைமறைவாகிவிட்ட இவரைப் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர்.

அனந்த லட்சுமியுடன் நள்ளிரவு நேரத்தில் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கேரள ஜோதிடர் சந்தோஷிடம் நடத்திய விசாரணையில் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை. அவர் அனந்தலட்சுமி மீது ஒரு தலையாக காதல் கொண்டிருந்தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதே போல் கணேஷ், கிறிஸ்டோபர் இருவரும் அனந்தலட்சுமி ஏதாவது உதவி தேவையென்றால் அழைப்பார் நாங்கள் செய்து கொடுப்போம். குடும்பம், குழந்தைகள் பற்றி விரிவாக பேசுவோம். மற்றபடி எங்களுக்குள் தவறான பழக்கம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால், அடிக்கடி அனந்த லட்சுமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் வேல்முருகன். அவருக்கு அனந்தலட்சுமி பண உதவி செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் அனந்த லட்சுமியின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்த சென்றதையடுத்து அனந்தலட்சுமிடம் வேல்முருகன், தகராறு செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு வாலிபர்களுக்கும் இடையே நடந்த ஒருதலைக் காதல் போட்டியில் அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேல்முருகன் பெரிய தொகை கேட்டு அனந்தலட்சுமியை மிரட்டி, அவர் தர மறுத்ததால் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளி வேல்முருகன்தான் என போலீசார் சந்தேகித்தாலும் வேறு சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+