காஞ்சி கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசம்- அர்ச்சகருக்கு வலை வீச்சு
காஞ்சீபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள் கோவில் அர்ச்சகர் பெண்களுடன், கோவில் கருவறைக்குள்ளேயே உல்லாசமாக இருந்ததாக பெரும் புகார் கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த அர்ச்சகரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் தேவநாதன் (35). இவர், செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிராமணர் தெருவில் வசித்து வருகிறார்.
கருவறை முன்பாகவே உல்லாசம்...
பக்தர்கள் வராத நேரத்தில், பல பெண்களிடம் கோவில் கருவறை முன்பாகவே அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்து வந்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.
இதையடுத்து சிலர் அர்ச்சகர், பெண்களுடன் உல்லாசமாக இருந்த அலங்கோலத்தை, வீடியோவில் படம் பிடித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதைப் பார்த்த போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கருவறை முன்பாக பல்வேறு பெண்களுடன் தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தனர். சில பெண்களுடன் கருவறைக்குள்ளும் உல்லாசமாக இருந்துள்ளார் தேவநாதன்.
இதையடுத்து எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் இது கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன் மீது வழக்குப் பதிவானதை அறிந்ததும் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் ஓடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தற்போது தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுன் உல்லாசமாக இருந்ததாக இதுவரை தமிழகத்தில் எந்த புகாரும் வந்ததில்லை. ஆனால் தற்போது வீடியோ ஆதாரத்துடன், ஒரு அர்ச்சகர் செய்த அசிங்கம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications